ஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் காய்கறி விநியோகம்

0 8938

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளில் காய்கறிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின், செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே, 16 வகை காய்கறி மற்றும் 5 வகை பழங்கள் கொண்ட தொகுப்பை, இந்த மூன்று நிறுவனங்கள் மூலம், விநியோகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே காய்கறி வாங்க விரும்புவோர், மதியம் ஒரு மணிக்கு முன்னர், சிஎம்டிஏ இணையதளம் வாயிலாகவோ அல்லது 90256-53376 மற்றும் 24791133 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments