நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டம்... பிரதமர் மோடி ஆலோசனை..

0 7749

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடலை நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில் அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை, இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

ஊரடங்கை நீட்டிக்கும் மாநிலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கைத் தளர்த்தும் மாநிலங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதற்குச் செய்ய வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments