டேராடூன் மிருகக்காட்சி சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

0 619

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மிருக க்காட்சி சாலையில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புலி ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் விலங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றும் வெளியில் இருந்து விலங்குகளுக்கு வரும் உணவு மூன்றடுக்கு கிருமிநாசினிகளால் சுத்திகரிக்கப்படுகிறது என்றும் கால்நடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments