நாளுக்கு நாள் நீளும் கொடூர கரம்.... உலுக்கும் கொரோனா... மிரளும் தமிழகம்

0 7374

தமிழகத்தில்  மேலும் 69 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனாவுக்கு149 பேர் பாதிக்கப்பட்டு, பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 39 பேரும், திருப்பூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ம் 45 பேர் பாதிப்புடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நெல்லை - 38 , ஈரோடு - 32 , திருச்சி - 30, நாமக்கல் - 28 மற்றும் ராணிப்பேட்டையில் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்கற்பட்டு மற்றும் மதுரையில் தலா 24 பேரும், கரூர் மற்றும் தேனியில் தலா 23 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுதவிர, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், சேலம் என மொத்தம் 33 மாவட்டங்களில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் 2- வது கட்டத்தில் இருக்கும் தமிழகம் 3 வது கட்டத்தை நெருங்கும் விளிம்பில் உள்ளது. எனவே, வெளியே செல்வதை தவிர்த்து, அனைவரும் வீட்டுக்குள் இருப்பதே நல்லது. அதேநேரம், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தால், வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments