சென்னையில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 5915

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விபரங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, ஒட்டுமொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் 45 பேருக்கும் நெல்லையில் 38 பேருக்கும் ஈரோட்டில் 32 பேருக்கும் ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று மட்டும் 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 621 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments