விடுதியில் தங்கி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

0 518

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு லலித் விடுதியில் அதன் ஊழியர்கள் கைதட்டி வரவேற்றுப் பாராட்டுத் தெரிவித்தனர்.

டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் லலித் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆகும் செலவை ஏற்பதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் பணி முடிந்து விடுதிக்கு வந்த மருத்துவர்களின் தன்னலமற்ற தொண்டைப் பாராட்டும் விதமாக விடுதிப் பணியாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments