சென்னையில் 13 மண்டலங்களில் 92 பேருக்கு கொரோனா

0 2429

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், 2 மண்டலங்கள் தவிர்த்து 13  மண்டலங்களில் மொத்தம் 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா தொற்று விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 20 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணாநகர் மண்டலத்தில் 12 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 12 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்திலும், திரு.வி.க.நகர் மண்டலத்திலும் தலா 11 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மணலி மண்டலத்திலும், அம்பத்தூர் மண்டலத்திலும் இதுவரை கொரோனா தொற்று இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments