எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் - மத்திய அரசு

0 1990

கொரோனா சூழலை சமாளிக்க, எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். ஓராண்டு காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை பிடித்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.

இதன் மூலம் கிடைக்கும் தொகை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதேபோல, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநர்கள், 30 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொள்ள தாங்களாக முன்வந்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நடப்பு நிதியாண்டுக்கும், வரும் நிதியாண்டுக்கும் நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு, எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைப்பதன் மூலம் 7ஆயிரத்து 900கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், இது அரசு கஜானாவில் செலுத்தப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments