மும்பை கடற்கரையோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடுவதாக பகிரப்பட்ட வீடியோ உண்மையல்ல

0 2189

மும்பை கடலோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடுவதாக வைரலான வீடியோ உண்மையில் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவையொட்டிமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால், நகருக்குள் வனவிலங்குகள் நடமாடுவது, கரையோரம் கடல்வாழ் உயிரினங்கள் முகாமிட்டது போன்ற வீடியோக்கள் சமீபத்தில் அதிகம் பகிரப்படப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை அருகே கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் வயலை சுற்றி திமிங்கலங்கள் நீந்துவதாக ஒரு வீடியோ வைரலானது.

இந்த வீடியோ உண்மையில் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என்றும் பிபிசி செய்தி நிறுவனத்தால் முதன் முறையாக பகிரப்பட்டது என்றும் வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments