இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து கொரோனா நோயை தோற்கடிப்பார்கள் - பிரதமர் மோடி

0 5128

கொரோனாவுக்கு எதிரான நீண்ட நெடிய போரில் ஓய்வுக்கோ சோர்வுக்கோ  இடமில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா துடிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், உலக சுகாதார நிறுவனமும் பிற நாடுகளும் இந்தியாவை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனசங்கத்தை சேர்ந்த தலைவர்களால், 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சி நிறுவப்பட்டது. அந்த கட்சியின் 40ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு, கட்சித் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஒரு நாள் மக்கள் ஊரடங்கின்போதும், நாடு தழுவிய முழு ஊரடங்கிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் 130 கோடி மக்களும் முதிர்ச்சி யை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். நாட்டு மக்கள் இந்த அளவிற்கு ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், நேற்று இரவு 9 மணி தொடங்கி 9 நிமிடங்கள் வரை மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா இருளை விரட்ட கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற தீபங்கள் ஏற்றப்பட்டதாகவும், 130 கோடி மக்கள் சேர்ந்து எடுத்து வைத்த இந்த நீண்ட அடி, நெடிய போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில அரசுகளின் ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் உலகுக்கே முன்மாதிரி என்று கூறினார்.

மாநில அரசுகளின் உதவியுடன் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் துடிப்புடன் இருப்பதாகவும், இந்த முழுமையான, ஒன்றிணைந்த அணுகுமுறையை உலக நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தில் சோர்வுக்கோ ஓய்வுக்கோ இடமில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த காலங்களில் போரின்போது நமது சகோதரிகளும் தாய்மார்களும் நகைகளை கொடையாக அளித்துள்ளனர் என்று கூறிய மோடி, தற்போது நிலவும் சூழ்நிலையும் போருக்கு நிகரானதுதான் என்றார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ஒவ்வொரு பாஜகவினரும் பங்களிப்பு செய்வதோடு, 40 பேரை அதுபோல செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய தவறாதீர்கள் என கேட்டுக்கொண்ட பிரதமர், வீட்டுக்குள் இருக்கும்போது முகத்தை மூடியிருக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments