70,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை.. அச்சத்தில் மக்கள்..!

0 4066

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனாவின் கோரப்பசிக்கு, உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகிறார்கள்.

இரவு நிலவரப்படி, கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டி விட்டது.

உயிரிழப்பை பொறுத்தவரை, 15 ஆயிரத்து 887பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 641 ஐ எட்டியது.

அமெரிக்காவில் உயிரிழப்பு 9 ஆயிரத்து 605 ஆகவும், பாதிப்பு 3 லட்சத்து 36 ஆயிரத்து 327 பேர் எனவும் உள்ளது. பிரான்ஸில் 8 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பலியாகி உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 621 பேரும், ஈரானில் 151 பேர் பலியாகினர்.

சீனாவில் உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுள்ளது. பெல்ஜியத்தில் ஆயிரத்து 447 பேரும்,நெதர்லாந்தில் ஆயிரத்து 766 பேரும் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments