அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

0 1497

வருகிற 8ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்க பிரதமர் மோடி, தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே வருகிற 8ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்க, பிரதமர் மோடி, செல்போன் மூலம் தொடர்புகொண்டு தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments