மகாராஷ்டிராவில் இருந்து திருச்சிக்கு நடந்தே வந்த 7 இளைஞர்கள்

0 6895

ஊரடங்கு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கும் காரணத்தினால் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துக்கு 7 இளைஞர்கள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளனர்.

சோலாப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 7 இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கால் தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் உணவு கிடைக்காமல் பரிதவித்துள்ளனர்.

இதையடுத்து சொந்த ஊர் செல்ல முடிவு செய்து கடந்த 29ம் தேதி அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், சாலை வழியே நடந்து, 7 நாட்களில் திருச்சியை வந்தடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் காரில் திருவாரூர் வந்த அவர்கள், அரசு மருத்துவ கல்லூரியில் பரிசோதனை நடத்தப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments