தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

0 10419

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர, 91 பேருடன் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

பரபரப்பாக இயங்கிய ஒவ்வொருவரையும், வீட்டுக்குள் முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தொற்று தாக்கம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவுக்கு
3 பேர் பலியாகி இருந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்தார்.ஏற்கனவே கடந்த 2 ம் தேதி இதே மருத்துவமனையில் மரணம் அடைந்த 72 வயது முதிய வரின் ரத்த மாதிரி சோதனை முடிவில் , இவரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது உறுதி
ஆனது.

எனவே, ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு உறுதி ஆனதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 மாவட்டங்களில் 95 பேருடன், சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவையில் 58 பேரும், திண்டுக்கலில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா - 23 பேரும் வைரஸ் தொற்று ஆளாகி இருக்கின்றனர். செங்கல்பட்டு - 22, மதுரை - 19 திருச்சி - 17, விழுப்புரம் - 15 பேர் , கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.திருவாரூர், சேலம், திருவள்ளூரில் தலா 12 பேர், விருதுநகர் , தூத்துக்குடி, நாகையில் தலா 11 பேர் , திருப்பத்தூர், கடலூரில் தலா 10 பேர் என மொத்தம் 571 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட 571 பேர்களில் 522 பேர், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தமிழகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments