உயிர் வாங்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது

0 1801

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தையும், பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு இன்று மேலும் 900 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 470 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கடுத்து பெல்ஜியம் நாட்டில் 164 பேரும், ஈரானில் 150 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவில் 19 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும் கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். சீனாவில் 3 பேரும், அமெரிக்காவில் 2 பேரும் இறந்துள்ளனர். இவர்கள் உள்பட இன்று உயிரிழந்த 900 பேரையும் சேர்த்து, உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

 கொரோனா நோய்க்கு அதிகம் பேர் பலியான நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த பட்டியலில் ஸ்பெயின் 2ம் இடத்திலும், அமெரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன.

இதேபோல் உலகில் மேலும் புதிதாக 11 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கும், ஈரானில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோருக்கும், உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

மருத்துவ சிகிச்சையில் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் குணமான நிலையில், 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 44 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments