கொரோனாவால் அடுத்த 2 வாரங்களில் பெருமளவில் உயிரிழப்பு நேரும்-டிரம்ப் அச்சம்

0 1732

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த இரு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டாயிரத்து நானூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த இரு வாரங்களில் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரும் என அச்சம் தெரிவித்தார். உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும், ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஆயிரம் பேர் நியூயார்க் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments