கொரோனா பலி: இந்தியாவில் 79ஆக உயர்வு

0 3724

இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 374ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 374ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 374 பேரில், 65 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். 

இதுதவிர்த்து மருத்துவ சிகிச்சையில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 267 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு அதிகம் பேர் பலியான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலமே உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து நாடு தழுவிய அளவில் அதிகபட்சமாக குஜராத்தில் 10 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.

 குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனா தொற்று உறுதியான 61 வயது பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களையும் சேர்த்து, நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments