ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்-பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை

0 11404

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய உதவக் கோரி அந்நாட்டு அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேரியா நோய்க்கு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அந்நாட்டு நிறுவனங்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்குக் கொள்முதல் ஆணைகளை வழங்கியிருந்தன. இந்நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உட்படப் பல்வேறு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா மார்ச் 25ஆம் தேதி தடை விதித்தது.

இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments