கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது-IMF

0 1203

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய மந்தநிலை வந்தால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியமா IMF எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இப்போது அனைவரும் பொருளாதார மந்தநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது உலக நிதி நெருக்கடியை விட மோசமானது என்று அவர் கூறினார்.

மேலும் உலகளவில் கொரோனா கிருமியின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஜார்ஜீவா வலியுறுத்தினார். மேலும் தற்போது ஏற்பட உள்ள மந்தநிலையின் தீவிரம், 2008ல் ஏற்பட்ட மந்தநிலையை விட மோசமாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments