சென்னையில் போன் செய்தால் வீடு தேடி வரும் காய்கனி..!

0 23644

சென்னையில் போன் செய்தால் வீட்டுக்கே மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கனிகளை வாங்கிக் கொடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குநரக அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்கு 044 29510400, 044 2951 0500, 044 24300300 மற்றும் 044 46274446 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டால் கொரோனா தொற்று தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கட்டுப்பாட்டறையில் 8056142349, 98410 31655, 9789918101, 882577390 உள்ளிட்ட 5 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களைப் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் வீட்டுக்குத் தேவையான காய்கனிகள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வீட்டுக்கே வந்து கொடுக்கும் முறையும் அமலாக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments