தி ஃபிளாஷ் தொடரில் நடித்த இளம் நடிகர் திடீர் மரணம்

0 1056

இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சித் தொடரான தி ஃபிளாஷ் தொடரின் நடிகர் லோகன் வில்லியம்ஸ் காலமானார். அவருக்கு வயது 16.

கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். வில்லியம்ஸின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது மறைவை உறுதிப்படுத்தி உள்ளனர்.

லோகன் மறைவு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவரது தாயார் மார்லிஸ் வில்லியம்ஸ், இந்த துக்கத்தால் குடும்பம் நிலைகுலைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா பிரச்சினையால் சமூக விலகல் அமலில் இருப்பதால் தற்போது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே தி ஃப்ளாஷ் தொடரின் நாயகன் க்ராண்ட் கஸ்டின், லோகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "மோசமான செய்தியை இப்போதுதான் கேட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments