ராதாக்களை தேடிவந்த தேவதாஸ்கள்... சுதந்திர பறவைகளின் சிறகொடித்த போலீஸார்

0 12079

சென்னையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீம்புக்கு ஊர் சுற்றி போலீசாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வாகன ஓட்டிகளின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை 81 பேருடன் முதலிடத்தில் உள்ள நிலையில் அதனை சமூக தொற்றாக மாறாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

image

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் ராதாக்களை தேடிவந்த தேவதாஸ்கள் நடுவீதியில் வசமாக காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.

இரு சக்கர வாகனம் இருந்தால் தானே சுதந்திர பறவையாய் வீட்டுக்கும், போலீசுக்கும் கட்டுப்படாமல் சிட்டாக பறப்பீர்கள் ? என அத்தனை பேரின் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 20 பைக்குகளை பறிகொடுத்தவர்கள் சிறகொடிந்த பறவைகள் போல கால்நடையாகவே வீட்டுக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

காவல் நிலைய வாசலில் மீண்டும் இருசக்கர வாகனத்துடன் சிக்கியவர்களுக்கு சுடுகால் தண்டனை வழங்கப்பட்டது. காலில் செருப்பு அனியாமல் கையை உயர்த்திக் கொண்டு தார்ச்சாலையில் நிற்கவிட்டதால் சூடு தாங்க இயலாமல் எண்ணை சட்டியில் போடப்பட்ட வடை போல கொதிக்க தொடங்கினர்.

ஊர் சுற்றி பிரபுக்களை சுற்றி வந்து காவல் ஆய்வாளர் கிருஷ்னமூர்த்தி புத்தி சொல்லி விரட்டி விட்டதோடு சாலையில் கூட்டமாக வாகனங்களில் சென்றோரையும் எச்சரித்து அனுப்பினார்.

அதே போல மயிலாடுதுறை அடுத்த செம்பனார் கோவிலில் அத்திவாசியமின்றி, அனாவசியமாக ஊருக்குள் ஊதாரியாக வலம் வந்த இரு வவ்வால்களை மடக்கிய காவல்துறையினர் ,தோப்புகரணம் போடவைத்து சோதனைக்குள்ளாக்கினர்.

இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் பல்லை இழித்துக் கொண்டு தமிழகம் முதலிடம் பிடித்தற்கு அரசின் எச்சரிக்கையை மீறி கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி மெத்தனமாக ஊர் சுற்றி திரியும் இவர்களை போல ஊதாரிகள் தான் காரணம் என்று சுட்டிகாட்டும் மருத்துவர்கள், மக்கள் அவரவர் வீட்டில் தனித்திருந்தால் மட்டுமே கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து கொரோனா பரவலை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த இயலும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments