கொரோனாவின் உச்சகட்ட மிரட்டல் : அச்சத்தில் மிரளும் உலக நாடுகள்

0 6070

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டி விட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தரை லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பில் சீனாவை இங்கிலாந்து முந்தி விட்டது.

கொரோனாவால் பல நாடுகளில் நிமிடத்திற்கு நிமிடமும், ஒரு சில நாடுகளில் நொடிக்கு நொடியும் பலி மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இன்றைய மாலை நிலவரப்படி, அமெரிக்காவை பொறுத்தவரை, 2 லட்சத்து 45 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்து விட்டதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் உயிரிழப்பு 13 ஆயிரத்து 915 ஆகவும், சீனாவில் 3 ஆயிரத்து 322 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் ஆயிரத்து 122 பேரும், பிரான்சில் 5 ஆயிரத்து 387 பேரும் பலியாயினர்.

ஈரானில் உயிரிழப்பு - 3 ஆயிரத்து 294 ஆக உயர்ந்தது இங்கிலாந்தில் ஒரே நாளில் 684 பேர் மரணம் அடைந்ததால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 605 ஆக அதிகரித்தது.

பெல்ஜியத்தில் ஒரே நாளில் 132 பேர் பலியானதால், உயிரிழப்பு ஆயிரத்து143 ஆகவும், நெதர்லாந்தில் ஒரே நாளில் 148 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 487 ஆகவும் உயர்ந்தது.

கொரோனாவை கண்டு, உலக நாடுகள் எல்லாம் அச்சத்தில் உறைந்திருக்க கிழக்கு ஆசிய நாடான வட கொரியா மட்டும் , எந்த வித பதற்றமும், பரபரப்பும் இல்லாமல் உள்ளது.

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் தனது எல்லைகளை மூடிய

வட கொரியா, அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது. எனவே, வட கொரியாவை பொறுத்தவரை, ஒரு கொரோனா நோயாளி கூட கிடையாது என அந்நாடு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments