மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்றால் 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை

0 7661

144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை  என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடமை செய்யும் என எச்சரித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், நேரு ஸ்டேடியம், அபிரமபுரம்   மற்றும் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். முகாமில் உள்ளவர்களுக்கு வேட்டி, லுங்கி, பனியன் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளதாகவும், செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிதார். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் எந்த வாகனங்களுக்கும் தடை இல்லை என்றும், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடமை செய்யும் என எச்சரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments