தமிழகத்தில் கொரோனா தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

0 668

கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அமைக்கப்பட்ட பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பணிக்குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார்.

அந்த குழுவில், தமிழக டி.ஜி.பி., சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா சமூக தொற்றாக மாறாமல் இருக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், மற்றும் ஊரடங்கை தீவிரமாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments