ஒத்துழைக்க மறுத்து எல்லை மீறினால் இது தான் நடக்கும்..! நம்ம போலீஸ் கெத்து

0 12202

வாணியம்பாடி அடுத்த பசீராபாத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற சுகாதார பணியாளர்களை சிறைப்பிடித்து ரகளை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணைக்காக இழுத்து சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேரை தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட சுகாதாரதுறை, சம்பந்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 150 பணியாளர்களை கொண்ட 75 இருவர் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி வாணியம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருப்பவர்களின் விவரம், வெளியூர் மற்றும் வெளினாடு சென்று வந்த விபரம், சளி, இருமல் காய்ச்சல், என பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து கணக்கெடுப்பு சீட்டை பறித்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டு களையும் பறித்துக் கொண்டு சிறை பிடித்ததாக கூறப்படுகின்றது.

தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்துக் கொண்டு வம்பு செய்ததால், தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டனர்.

அது மட்டுமல்லாமல் சுகாதார பணியாளர்களிடம் வம்பு செய்து விட்டு வீட்டுக்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த போது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு போலீசுடன் செல்ல மறுத்தார்.

போலீசார் முறையாக பேசி அழைத்தும் வராமல் அடம்பிடித்த அந்த இளைஞர், வீட்டில் இருந்தவர்களின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் அவரை இழுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் ஆவேசம் ஆனார்கள்..!

போலீஸ்காரர் ஒருவர், அடம்பிடித்த இளைஞரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்ததால், அந்த இளைஞர் வீதிக்கு வந்தார். அவரை அதிரடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை போலவே மேலும் ஒரு இளைஞரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சுகாதார பணியாளர்கள் தங்கள் நலனுக்காக வந்துள்ளார்கள் என்பது கூட தெரியாமல் எதிர்ப்பது, போராடுவது என அனைத்தும் கொரோனா பரவலை அதிகப்படுத்துமே தவிர கொரோனா வைரஸின், சமூக பரவலை தடுக்க உதவாது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், முன் எச்சரிக்கை கணக்கெடுப்பிற்கு தொடட்புடையவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறி வம்பு செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments