200 ஏர் இந்தியா விமானிகளுடனான ஒப்பந்தங்கள் ரத்து

0 1416

200 விமானிகளுடனான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து (temporarily suspended) செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்குவதை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது.

இதனால் ஏறத்தாழ ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் அனைத்தும் பறக்காமல் தரையில் நிற்கும் நிலையில், ஓய்வுக்கு பிறகும் பணியில் தொடர அனுமதிக்கப்பட்ட 200 விமானிகளுடன் செய்து கொண்ட பணி தொடர்பான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்நடவடிக்கைக்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், வருமானம் பெருமளவு குறைந்திருப்பதுமே காரணம் என்று அந்நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments