வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால வட்டியையும் தள்ளுபடி செய்யவேண்டும்- சோனியா காந்தி கோரிக்கை

0 2839

வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால தவணைஅவகாசம் அளித்த்தை போல அந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்யவேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வட்டி தள்ளுபடி இல்லை என்றால் இந்த 3 மாத தவணை அவகாசம் அளிக்கப்பட்டதற்கு எந்த மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்காது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள கட், வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் நடுத்தர மக்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments