தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதற்காக ஒரே நாளில் 46,970 பேர் கைது

0 1560

144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லாமல் அநாவசியமாக வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது தமிழக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் விதிமீறல்கள் தொடர்பாக 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதே போல் தமிழகம் முழுவதும், 42 ஆயிரத்து 035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

46 ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16 லட்சத்து 27 ஆயிரத்து 844 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments