பெண்ணிடம் அத்துமீறல் மின்வாரிய ஊழியருக்கு தர்ம அடி

0 2009

பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டு தர்ம அடி வாங்கிய மின்வாரிய ஊழியர், போலீசார் தாக்கியதாக மனைவியிடம் பொய் கூறி வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் மேட்டூர் அருகே அரங்கேறியுள்ளது.

நேரு நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, மேட்டூர் அணையின் சுரங்க மின் நிலைய ஊழியர். கடந்த 31ஆம் தேதி, 144 தடை உத்தரவை மீறியதாக கூறி போலீசார் தன்னை கடுமையாக தாக்கியாக, மின் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அப்படி சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், பழனிச்சாமியிடம் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.

இதில், தனது அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஒப்பந்த தொழிலாளியின் வீட்டிற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள்  கதவை சாத்திக் கொண்டு பழனிச்சாமிக்கு தர்ம அடி கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனை தனது மனைவியிடம் மறைக்க, போலீசார் தாக்கியதாக பொய் கூறிய பழனிச்சாமி, போலீசிலும் புகார் அளித்துள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பழனிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments