சாப்பிட வாங்க.. பசி தீர்க்கும் அம்மா உணவகம்..!

0 2451

ஊரடங்கால், ஓட்டல்கள் - உணவு விடுதிகள் எல்லாம் பெரும்பாலும் மூடிக்கிடக்க, சென்னை மாநகர ஏழை மக்களின் பசி தீர்க்கும் பணியில் அம்மா உணவகம் கை கொடுத்து வருகிறது. இதுகுறித்து, ஒரு சிறப்பு பார்வை.

வெறிச்சோடிய சாலைகள் ! - வீதியெங்கும் மயான அமைதி ! என ஊரெல்லாம் ஊரடங்கில் முடங்கி கிடக்க, சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கும் ஹோட்டல்கள் - உணவு விடுதி களுக்கு மத்தியில், அம்மா உணவகங்கள் பசி தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சென்னை மாநகரின் 200 வார்டுகளிலும் தலா 2 அம்மா உணவகங்கள் - அரசு மருத்துவ மனைகளில் 7 என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

காலையில் ஒரு ரூபாய் இட்லி - 5 ரூபாய்க்கு பொங்கல் வழங்கும் அம்மா உணவகத்தில் மதியம் 3 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், புதினா சாதம் மற்றும் 5 ரூபாய்க்கு தயிர் சாதம் கிடைக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, ஒரு ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படும் சப்பாத்தி, ராட்சத எந்திரம் மூலம் மின்னல் வேகத்தில் தயாராகிறது.

ஊரடங்குக்கு முன்பு வரை, நாளொன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சப்பாத்திகள் இங்கு விற்பனை ஆயின. தற்போது, இதன் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாராகி, மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சப்பாத்தி, தங்களுக்கு வரப்பிரசாதம் என சப்பாத்தி பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கங்களுக்கு சாப்பிட வரும் ஏழைகளுக்கு , கொடையாளிகள் பலர், மொத்தமாக பணத்தை செலுத்தி விடுகிறார்கள். ஹோட்டல்கள் - உணவகங்கள் கை கொடுக்கா விட்டாலும், கை கொடுக்கிறது, அம்மா உணவகம் .

இரவு நேரங்களில் உணவு கிடைக்காமல் அல்லாடும் மக்களுக்கு அம்மா உணவகங்கள்
ஒர் அட்சய பாத்திரம் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments