ஈரோட்டில் 24 பேருக்கு கொரோனா உறுதி

0 4743

ஈரோட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்து நாட்டினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் உட்பட கொரோனா உறுதிப்பட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடைய கொல்லம்பாளையம் மரப்பாலம், மோசிகீரனார் வீதி, ஸ்டேட் வங்கி சாலை, ஈரோடு - பவானி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஆபத்தை அலட்சியப்படுத்தி சுற்றித் திரிந்தவர்களை தடுத்து போலீசார் அறிவுறுத்தினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments