தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..!

0 14900

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

"ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி"

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களில் 515 பேர் தவிர பலர் குறித்து முதலில் தகவல் இல்லை

குடும்பத்தினர், உற்றார், உறவினருக்கு தொற்றுநோய் பரவும் முன் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க அரசு கோரியது

இதன்படி, டெல்லி சென்று திரும்பியவர்களில் எஞ்சியவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர்

அரசின் கோரிக்கையை ஏற்று, தாமாக முன்வந்து தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழ்நாட்டில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 77,330: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

அரசின் தனிமைப்படுத்துதல் கண்காணிப்பில் 81 பேர் உள்ளனர்: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

28 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து 4070 பேர் திரும்பியுள்ளனர்: சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழ்நாட்டில் மொத்தம் 17 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

வரும் வாரத்தில் கூடுதலாக 6 கொரோனா பரிசோதனை லேப்புகள் இணைப்பு: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

இதுவரையில், 2726 பேரும் கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

அதில், 234 பேருக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர்

இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர்

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆவர்

நேற்று வரை, டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது

இன்றைய எண்ணிக்கையின் மூலம், டெல்லி சென்று திரும்பியவர்களில் மொத்தம் 190 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆகும்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தனிவார்டில் 995 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டெல்லி சென்று திரும்பியவர்கள் நேற்று முன்தினம் 515 பேரது அடையாளம் காணப்பட்டிருந்தது

எஞ்சியவர்கள் தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று, தாமாக முன்வந்து மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்

டெல்லி சென்று திரும்பிய 1103 பேரில், 658 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

எஞ்சியவர்களுக்கு நாளை மாலைக்குள் கொரோனா பரிசோதனை முழுமையாக நடத்தப்பட்டுவிடும்: பீலா ராஜேஷ்

கொரோனா தொற்றுநோய் தடுப்புக்கான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன

டெல்லி மாநாட்டிற்கு சென்று 1103 பேரது வீடுகளை சுற்றிலும் 8 கி.மீ சுற்றளவில் ஆய்வு பணிகள் தீவிரம்

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் கொரோனா பரவியதா என தீவிர ஆய்வு

போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவியதா என கண்டறியும் ஆய்வு தீவிரம்: சுகாதாரத்துறைச் செயலாளர்

தீவிர ஆய்வின் மூலம் கொரோனா சமுதாய தொற்றாக மாறும் ஆபத்தை நம்மால் தடுக்க முடியும்: பீலா ராஜேஷ்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 1 லட்சம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெறலாம் என கண்டறியப்பட்டுள்ளது

இதையடுத்து, 1 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகின்றன

கொரோனா தொற்றுநோய் மிக எளிதாக முதியவர்களை தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது: பீலா ராஜேஷ்

எனவே, ஒருபோதும், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது: சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களுக்கு இரவு-பகலாக பரிசோதனை

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய 1103 பேரில் இதுவரை 190 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

டெல்லி சென்று திரும்பியவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவியுங்கள்

இன்று உறுதி செய்யப்பட்ட 110 பேரில், அதிகபட்சம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர் ஆவர்

கொரோனா உறுதியான 110 பேரில், கோயம்புத்தூர் 28 பேர்; தேனி-20 பேர்; திண்டுக்கல்-17 பேர் அடங்குவர்

மதுரை, திருப்பத்தூர், செங்கல்பட்டு தலா-7, திருநெல்வேலி-6, சிவகங்கை-5 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம், ஈரோடு- தலா 2; கரூர், சென்னை, திருவண்ணாமலை- தலா 1

கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்: சுகாதாரத்துறைச் செயலாளர்

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதில் இதுவரை 19 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments