6 வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வந்தது..!

0 3294

பொதுத்துறையைச் சேர்ந்த 6 வங்கிகள் பிற 4 வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த 6 வங்கிகள் நிதிநிலை வலுவான 4 வங்கிகளுடன் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர வங்கியும், கார்ப்போரேசன் வங்கியும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியன பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் இன்று முதல் அவை இணைந்த வங்கியின் பெயர்களில் செயல்படும். பஞ்சாப் நேசனல் வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், கனராவங்கி நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாகவும் உருவெடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments