இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1637ஆக உயர்வு

0 4975

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 38ஆகவும், பாதித்தோரின் எண்ணிக்கை 1637-ஆகவும் அதிகரித்துள்ளது.

 மகாராஷ்டிர மாநிலம் பால்கர் (palghar) மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அனுமதிக்கப்பட்ட 50 வயது நபருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தற்போது முடிவு தெரிய வந்துள்ளது. அதில் அந்த நபருக்கு கொரோனா இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ஆந்திரா வந்த 43 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் மேலும் 19 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுமைக்கும் 240 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 637ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட ஆயிரத்து 637 பேரில் 49 பேர் வெளிநாட்டினர் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாட்டின் பல்வேறு இடங்களில் சிகிச்சைக்கு பிறகு 133 பேர் குணமாகி விட்டதாகவும் கூறியுள்ளது. இதுதவிர்த்து கொரோனாவுக்கு ஆயிரத்து 466 பேர் தீவிர சிகிச்சை பெறுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments