கொரோனாவின் கொடிய தாக்குதலுக்கு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 2751

உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து முன்னூறை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவலின் வேகம் காரணமாக உலகில் நொடிக்கு நொடி பலியும், பாதிப்பும் அதிகரித்தபடி உள்ளது. கொரோனாவுக்கு உலகில் இன்று மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதையும் சேர்த்து உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து முன்னூறை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக எண்ணிக்கையில் இத்தாலியில் 12 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து அதிகபட்சமாக ஸ்பெயினில் 8 ஆயிரத்து 400 பேரும், அமெரிக்காவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா உதவி செய்யத் தொடங்கியுள்ளது. இத்தாலிக்கு கடந்த வாரம் மருத்துவ உபகரணங்களை அனுப்பிய ரஷ்யா, தற்போது ராணுவ நிபுணர்களையும், வீரர்களையும் அனுப்பியுள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதியிலுள்ள நகரங்களில் கிருமி நாசினியை தெளித்து, கொரானாவை கட்டுப்படுத்தும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுதவிர்த்து உலகம் முழுவதும் இன்று ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையும் சேர்த்து உலகில் கொரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 95 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் குறித்து குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேசி கசேய், தற்போதைக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை உலக நாடுகள் மேலும் தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவில் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து 6 லட்சத்து 39 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களில் 33 ஆயிரம் பேர் கவலைக்கிடமாய் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments