கொரோனாவுக்கு எதிரான யுத்தம்-பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு SBI 100 கோடி ரூபாய் நன்கொடை

0 955

கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் பிரதமரின் பேரிடர்  நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.

இந்த வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் பணிபுரியும் சுமார் இரண்டு லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் தங்களின் இரண்டு நாள் ஊதியத் தொகையை அளித்துள்ளனர். இதன்மூலம் சேர்ந்த 100 கோடியை வழங்க உள்ளதாக எஸ்.பி.ஐ.வங்கி அறிவித்துள்ளது. இதே போல் IFFCO எனப்படும் இந்திய உரம் கூட்டுறவு விவசாய சங்கம் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

லார்சன் அண்ட் டூப்ரோ (larsen & toubro ) நிறுவனம் 150 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments