கொரோனாவை தடுக்க பிசிஜி உதவிகரமா?

0 266

காச நோய் தடுப்பூசியான பிசிஜி (BCG)போடப்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறந்த உடனேயோ அல்லது ஒரு வயதுக்குள்ளாகவோ குழந்தைகளுக்கு பிசிஜி (BCG)தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் சிறு வயதிலேயே நுரையீரலைத் தாக்கும் காசநோய் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இது போன்ற தடுப்பூசி போடுவது நீண்ட கால அரசு கொள்கையாக உள்ளது.

ஆனால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் medRxiv என்ற மருத்துவ இணைய தளத்தில் அமெரிக்க ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிசிஜி போடப்பட்ட நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிசிஜி தடுப்பூசியை பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டாயமாக்கிய நாடுகளில் இருக்கும் வயதானவர்களுக்கு கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதே சமயம் தாமதமாக 1984 க்குப் பின்னர் பிசிஜியை அறிமுகப்படுத்திய ஈரானில் பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பிசிஜி தடுப்பூசி கொரோனாவுக்கு எதரான பலமிக்க ஒரு ஆயுதமாக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.

1949 முதலே இந்தியாவில் பிசிஜி தடுப்பூசி முறை நடைமுறையில் உள்ளதால், கொரோனாவை எதிர்த்து போராடி வெற்றி பெறலாம் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிசிஜி யை சுகாதார பணியாளர்களிடம் சோதித்துப் பார்க்க பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments