கொரோனா பாதிப்பைச் சீரமைக்கப் பிரதமர் நல நிதிக்குக் குவியும் நன்கொடை

0 1354

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் நலநிதிக்கு நன்கொடை வழங்கப் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது 2 லட்சத்து 56 ஆயிரம் பணியாளர்கள் இருநாள் ஊதியத்தைப் பிரதமர் நல நிதிக்குப் பங்களிப்பாகச் செலுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இதேபோல் இப்கோ எனப்படும் இந்திய உழவர்கள் உரக் கூட்டுறவு நிறுவனம் 25 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments