எலும்பு முறிந்த காலுடன் நடந்தே சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளி

0 1075

மத்திய பிரதேசத்தில் இளைஞன் ஒருவன், காலில் போடப்பட்ட மாவுக்கட்டை பிரித்துவிட்டு எலும்பு முறிந்த காலுடன் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்ட வீடியோ நெஞ்சை நொறுங்கச் செய்கிறது.

பிபாரியா (Pipariya) நகரில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பன்வர்லால், ஊரடங்கு உத்தரவால் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு திரும்பும்பொருட்டு, கத்தரிக்கோல் கொண்டு தனது கால்களில் போடப்பட்ட கட்டை பிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பணியின்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், ஊரடங்கையொட்டி வேலை இல்லை என்பதால் வேறு வழியின்றி சொந்த ஊர் திரும்புவதாகவும் பன்வாரிலால் தெரிவித்தார். 500 கிலோ மீட்டர் வரை வாகனம் ஒன்றில் வந்ததாகவும், மீதமுள்ள 240 கிலோ மீட்டரை நடந்தே கடக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments