வீட்டிலுள்ள பெண்களுக்கு கூடுதல் சுமை கொடுக்க வேண்டாம் - நவீன் பட்நாயக்

0 2468

ஊரடங்கு சமயத்தில் வீட்டிலுள்ள பெண்களை 3 வேளைகளும் சமைக்க வைத்து, கூடுதல் சுமையை சுமத்த வேண்டாம் என ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு நாட்களை விடுமுறையை கழிப்பது போல் நினைத்துக் கொள்ளாமல், எளிமையான வகையில் உணவு எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ள அவர், ஏற்கனவே கோடை நெருங்கிவிட்டதால் பெண்களை நாள் முழுவதையும் சமயலறையிலேயே செலவிட வைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர்களை கொதிப்படைய செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ள நவீன் பட்நாயக், வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து சமைத்து உண்ணுமாறும், 3 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறிகளை வாங்க வெளியே வரும் வகையில் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments