உலகளவில் 8 லட்சம் பேருக்கு கொரோனா

0 2338

உலகில் புதிதாக மேலும் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமாக அறியப்படும் சீனாவில் மேலும் 5 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், உலகின் மற்ற நாடுகளில் சுமார் ஆயிரம் (1000) பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 470 பேரும், பெல்ஜியத்தில் 190 பேரும், ஆஸ்திரியாவில் 20 பேரும் சுவிட்சர்லாந்தில் 14 பேரும் பலியாகியுள்ளனர். இதுபோல மேலும் பல நாடுகளில் பலியானோரையும் சேர்த்து உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது.

ஜப்பானில் 56 பேர் மரணமடைந்ததுடன், ஆயிரத்து 900 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவில் கொரோனாவுக்கு 28 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 101 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டதால், பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் ஏப்ரல் 30ம் தேதி வரை சுகாதார நெருக்கடி நிலையை (health emergency) அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. 

கொரானா உயிரிழப்பு நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 590 பேர் பலியாகியுள்ளனர். 2ஆவது இடத்திலுள்ள ஸ்பெயினில் இதுவரை 8 ஆயிரத்து 100 பேரும், 3வது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 300 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 565 பேர் கொரோனாவுக்கு பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 170ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரானா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜெர்மனி ஆகியவை 2 முதல் 5 வரையிலான இடங்களிலும் உள்ளன.

உலகம் முழுவதும் இதுவரை சிகிச்சைக்கு பிறகு 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களில் 30 ஆயிரத்து 200 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments