உரிய நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை

0 1233

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், டெல்லியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறையினர் தங்களது வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பிரசவத்திற்கு உதவினர். 

Maidan Garhi நகரைச் சேர்ந்த அஞ்சணி என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர் பல மணி நேரம் முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  தங்களது வாகனத்திலேயே கர்ப்பிணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்து, தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரிய நேரத்தில் தன் மனைவிக்கு உதவி குழந்தையையும், மனைவியும் காப்பாற்றிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் சங்கீத் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments