பங்குச்சந்தைகளில் ஏற்றம்..!

0 1253

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல், முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு ஆகியவற்றால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து 29 ஆயிரத்து 13 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 165 புள்ளிகள் உயர்ந்து எட்டாயிரத்து 446 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை 3 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை உயர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments