கொரோனா ரெயில் பெட்டி வார்டு கை கொடுக்கும் தெற்கு ரெயில்வே

0 3019

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ரெயில் பெட்டிகளை, சிறப்பு வார்டுகளாக உருவாக்கும் பணி சென்னையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு பெட்டியில் 7 பேர் முதல் 14 பேர் வரை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வசதிகள்  இணைக்கப்பட்டு உள்ளது.

மிரட்டும் கொரோனாவை ஒடுக்கும் பணியில் ஈடுபட் டுள்ள சுகாதாரத்துறையினருக்கு, பல்வேறு துறையின ரும் உதவிக்கரம் நீட்ட, தெற்கு ரெயில்வே நிர்வாகமும் கை கொடுக்க முன்வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கை வசதி தேவை என்பதை கருத்தில் கொண்டு, ரெயில் பெட்டிகளை, தற்காலிக கொரோனா வார்டாக மாற்றும் பணி, சென்னை - பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் மற்றும் ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலைகளில், இரவு - பகலாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக, 8 ரெயில் பெட்டிகளை தயார் செய்து வரும் ரெயில்வே நிர்வாகம், தேவைக்கு ஏற்ப, கூடுதலாக கொரோனா சிறப்பு ரெயில் பெட்டி வார்டுகளை தயாரித்து கொடுக்கவும் தயார் என தெரிவித்துள்ளது.

கொரோனா சிறப்பு ரெயில் பெட்டி வார்டில், மாற்றி அமைக்கப்பட்ட கழிவறை, புதிதாக குளியலறை, திரைச்சீலை, மருந்து பொருட்களை வைக்க தேவையான வசதிகள் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவ உபகரணங்களுக்கு தேவையான மின்சாரம், தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், பேட்டரி வசதியும் பொருத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர, ரெயில்வே மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியை உருவாக்குவதற்காக இரும்பு கட்டில்கள் தயாரிக்கும் பணியிலும், ரெயில்வே பணிமனை ஊழியர்கள், ஈடுபட்டு உள்ளனர்.

இப்பணிகள் அனைத்தும் தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அநேகமாக, இன்னும் ஓரிரு நாளில் பணிகள் முழுமை அடைந்து, கொரோனா ரெயில் பெட்டிகள், தமிழக சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு கொரோனா ரெயில் பெட்டிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments