மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவித்த கன்னடர்கள் மீட்பு

0 905

மகாராஷ்டிரத்தில் பணியாற்றி வந்த கன்னடர் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கர்நாடக மாநில அரசின் முயற்சியால் பேருந்துகளில் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, அகமதுநகர், நாசிக் மாவட்டங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர்.

மகாராஷ்டிரத்தில் மார்ச் 21ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் வேலையிழந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு சார்பில் மகாராஷ்டிரத்துக்கு அரசு பேருந்துகள் அனுப்பப்பட்டன.

முதற்கட்டமாக 62 பேருந்துகளில் இரண்டாயிரத்து 442 பேர் பெல்காமுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments