"நாட்டுப் பற்று என்பது இப்போது வீட்டுக்குள் இருப்பதுதான் " -கெஜ்ரிவால்

0 1599

நாட்டுப் பற்றை காட்டுவதற்கு மிகச்சிறந்த நேரம் இதுதான் என்று கூறியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டிலேயே இருப்பது தான் மிகப்பெரிய நாட்டுக்குரிய சேவையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் உங்கள் வீட்டு வாடகையை அரசு செலுத்தும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஒரே நேரத்தில் திரண்ட சம்பவத்தை குறித்து வேதனை தெரிவித்த கெஜ்ரிவால் டெல்லியில் ஒருவர் கூட பட்டினி கிடக்க மாட்டார் என்று தாம் உறுதியளித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

தினமும் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கை மதிக்காமல் அலட்சியமாக இருந்தால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடுவோம் என்றும் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments