உலக நாடுகளை உலுக்கும் கொரோனா..! 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை

0 5427

சர்வதேச அளவில் கொரோனா கிருமியின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் 27 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தனது கொலைகாரப் பயணத்தைத் தொடங்கிய கொரோனா கிருமி சர்வதேசத்தையும் சர்வநாசம் செய்து வருகிறது.

வைரசின் தாக்குதலால் இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்ட உள்ளது.

ஒன்றரை லட்சம் பேர் குணமடைந்திருந்தாலும் மேலும் 27 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 209 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஆயிரத்து 200 பேருக்கும் மேல் மரணித்துள்ளனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே அச்ச உணர்வு எழுந்துள்ளது.

இதேபோல் பிற ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்தில் ஒரே நாளில் 132 பேர் பலியானதால் இதுவரை 771 பேரும், ஜெர்மனியில் 100 பேர் மரணித்ததால், உயிரிழப்பு 533 ஆகவும், பெல்ஜியத்தில் பலியானோர் 431 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் சமூக விலக்கைக் கடைப்பிடிக்காதவர்களின் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்படும் என இருநாட்டு அரசுகளும் தெவித்துள்ளன.

தென்கொரியாவில் கட்டாய ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த நாட்டில் கொரோனா தாக்குதலால் 152 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments