ஈராக்கில் உள்ள படைத்தளத்தை விட்டு வெளியேறியது அமெரிக்கா

0 1523

ஈராக்கில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த படைத்தளத்தை அந்நாட்டு ராணுவத்திடம் அமெரிக்கப்படைகள் ஒப்படைத்துள்ளன.

வடக்கில் உள்ள மாகாணமான கிர்குக்கில் கே 1 என்ற படைத்தளத்தை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிர்வகித்துவந்தது. அமெரிக்காவின் தரைப்படை மற்றும் விமானப்படை இங்கு இயங்கி வந்தன. இங்கிருந்துதான் ஈரான் தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் வகையில் கே 1 படைத்தளத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்புக் கருதி இந்தப் படைத்தளத்தில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற முடிவு செய்துள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments