தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

0 4637

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஈரோட்டை சேர்ந்த மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா பாதித்ததால் ஈரோட்டில் சிகிச்சை பெற்று தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மேலும் 8 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு தொடர்பாக 89 பேரின் ரத்த மாதிரிகளுக்கு சோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும், 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், பீலா ராஜேஷ் தெரிவித்தார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் ஏற்கனவே குணமடைந்த நிலையில், மேலும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் குணமடைந்திருப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் 295 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகளில் 17 ஆயிரம் படுக்கைகளும், 3,018 வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 1,763 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1,632 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகளுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments